Tuesday, November 29, 2011

சூப்பர் ஸ்டார் கூட ஒரு போட்டோ!


நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் சினிமாவுல இருந்தார்.  ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஒரு நாள் அவர் எங்க எல்லாரயும், பிரசாத் ஸ்டூடியோவுல ஒரு ரஜினி பட பூஜையில கலந்துக்கறத்துக்கு ஏற்பாடு செஞ்சாருஅது ஒரு பெரிய இயக்குணருடைய படம்சினிமாவுல இருந்து பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் கலந்துக்கிட்ட ஒரு பெரிய திரையுலக விழாகமல் வருவாக, சிவாஜி வருவாக, மற்றும்  திரையுலக மக்கள் எல்லாம் வருவாக அப்படீன்னு சொன்ன உடனே ரெண்டு நாளுக்கு முன்னாலேயே தூங்காம, கொள்ளாம  சுத்தி விட்ட கோழி மாதிரி எல்லாரும் ஒரு மார்கமா கிடந்தோம். வர்ற எல்லாரோடையும், குறிப்பா ரஜினி, கமல் கூட எப்படியாவது போட்டோ எடுத்தக்கனும்னு, இரவல் காமெரா, காசெல்லாம் சேர்த்து  பிலிம் ரோல் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு, நம்ம கிட்ட கிடந்த ஒன்னு ரெண்டு செட் பேன்ட், சட்டையிலேயே எதை போட்டுக்கலாம்னு குழம்பி, சரி எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டையுமே அதுங்க கதற கதற, தோய்ச்சு, தேய்ச்சு, முதல் நாள் காலையிலேயே ஹாங்கர்ல தொங்க விட்டாச்சுஅப்புறம் நமக்கு 1 ரூபா ஷாம்பூ எல்லாம் வாங்கி வச்சாச்சு.

காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பறதுன்னு பிளான்மூணு மணிக்கெல்லாம் எழுந்து, இருட்டுல கிழவி காலை எல்லாம் மிதிச்சி, துப்பு வாங்கி, இருந்த ரெண்டு செட் டிரஸ்ல, கமலுக்கு கவுன்ட்டர் குடுக்கற மாதிரி ஒன்னை செலக்ட் பண்ணி போட்டுக்கிட்டு கிளம்பியாச்சு.   பசங்க, பொண்ணுங்கன்னு நம்ம குரூப் ஒண்ணா ஜமா சேர்ந்து பஸ்ஸை புடிச்சி 10 மணி பூஜைக்கு 8 மணிக்கெல்லாம் பிரசாத்துல நாங்க ஆஜர்.

ஒரு ரோல் போட்டோ தான் இல்லையா, அதனால எங்க குரூப்புக்குள்ள ஆளாளுக்கு, எத்தனை போட்டோன்னு ஒரு சின்ன ஒப்பந்தம் வேறநம்ம ரஜினி ரசிகரும், கமல் ரசிகர் ஒருத்தரும் அவங்க அவங்க தலைவர்களோட கண்டிப்பா சோலோ ரெண்டு அப்படீன்னு வேற பிக்ஸ் பண்ணிக்கிட்டாங்கநம்ம பொண்ணுங்க பாவம், இவனுங்களோட வீட்டுக்கு போய் சேர்ற வரைக்கும் நமக்கு ராகு காலம் தான்னு கொஞ்சம் கலவரத்தோடேயே இருந்தாங்கஎங்களுக்கு ரெண்டு குரூப் போட்டோ மட்டும் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டு அமைதி ஆயிட்டாங்கவேற வழி.

ஒம்போதரை மணிக்கு மேல ஒவ்வொரு நட்சத்திரமா வராங்கரம்யா கிருஷ்ணனை திடீர்னு அவ்வளவு கிட்டத்துல பார்த்ததும் கிர்ருனு ஆயிடுச்சி.   பாண்டிய ராஜன்  ஏதோ நம்ம சொந்த அண்ணாத்தை மாதிரி ரொம்ப சாதாரணமா நடந்து போறதை பார்த்து ஒரே ஆச்சர்யம்இளையராஜா நடந்து போகும் போது ஏதோ ஒரு சாமியார் போற மாதிரி அவ்வளவு அமைதிசிவக்குமார், சாருஹாசன் எல்லாம் வராங்கரேகாவை பார்த்து பொளந்த வாய் மூடவே இல்லைஅவ்வளவு அழகு அவங்க

சிவாஜி வரமாட்டார்னு பேசிக்கிட்டாங்க. நம்ம சிவாஜி ரசிகர் 'எங்கே நிம்மதி' சிவாஜி மாதிரியே ஆயிட்டாரு. கமலும், ரஜினியும் இன்னும் வரலேகடைசியிலே ரஜினி கூட வந்துட்டாரு.  சிம்பிளா கருப்பு ஜீன்ஸ், கோடு போட்ட சட்டையில ஸ்டைலா வேகமா நடந்து வந்தாரு. நம்ம ரஜினி ரசிகர், திருப்பதி பெருமாளை கிட்டக்க பார்த்த பரவசத்துலே சிலையா நின்னுட்டாருகன்னத்துல மட்டும் போட்டுக்கலேகமல் கடைசி வரைக்கும் வரவே இல்லேநம்ம கமல் ரசிகர் அப்படியே கான்சர் வந்த வாழ்வே மாயம்  கமல் மாதிரியே ஒரு பொசிஷன்ல போய் நின்னுட்டாரு.

பூஜை அமர்களமா ஆரம்பிச்சு நடந்து முடிஞ்சுதுகாமெரா நம்ம கையில இருந்ததுனால, கண்ணு பாக்குற அத்தனையும் சும்மா டிக் டிக் டிக் கமல் பீலிங்குல அடிச்சு தள்ளிக்கிட்டு இருந்தேன்திடீர்னு நம்ம ரஜினி ரசிகர் சுய நினைவுக்கு வந்து, "டேய், தலைவரோட போட்டோ எடுக்கனும்டாசும்மா வேஸ்ட் பண்ணிட்டியே" அப்படீன்னு கொதிச்சு போய் , எத்தனை எடுத்து இருக்கேன் இன்னும் எத்தனை பாக்கின்னு ஆடிட் பண்ண ஆரம்பிச்சிட்டாருஆனா நான் அதுக்கு முன்னாடியே ஒரு 25 போட்டோ காலி  பண்ணி அடுத்த ஷாட் என்னன்னு ஒரு கலை தாகத்தோட காத்து கிடந்தேன்கமல் வரலேன்னதும் கமல் ரசிகரோட சோலோ ஷாட் மிச்சம் அப்படீன்னு கணக்கு போட்டு நம்ம ரஜினி ரசிகரு, தயங்கி தயங்கி, ஸ்டைலா தம் அடிச்சுக்கிட்டு இருந்த ரஜினிக்கிட்ட போய் போட்டோ எடுக்க பெர்மிஷன் வாங்கிட்டாருஎல்லாருக்கும் ஒரே பரவசம்போய் ரஜினி பக்கத்துல நின்னுகிட்டாங்க

நான் அப்படியே போட்டோ எடுக்குற நம்மளை யாரோ போட்டோ எடுக்கற கணக்கா பயங்கர ஸ்டைலா எல்லாம் நின்னுகிட்டு வியு பைண்டர்ல, அப்படி பாக்குறேன், இப்படி பாக்குறேன், 120 டிகிரில வச்சு பாக்குறேன்.  "நம்மளை பாலச்சந்தர், SPM கூட இப்படி ஆங்கிள்  வச்சு பார்த்து இருக்க மாட்டாங்கன்னு" நினைச்சு இருப்பாரு ரஜினிநானும் சின்சியரா யாரும் மிஸ் ஆயிடக் கூடாதுன்னு, நீ கொஞ்சம் உள்ள வா, நீ கொஞ்சம் ரைட்ல போ அப்படீன்னு இன்ஸ்டிரக்ஷன்  எல்லாம் குடுத்துகிட்டு இருந்தேன்குரூப்புல நின்னவங்க எல்லாம் கடுப்பாயி, “டேய் சீக்கிரம் எடுடா” அப்படீன்னு பல்லை கடிச்சுக்கிட்டே திட்ட ஆரம்பிச்சுட்டாங்கஅப்போ தான் ரஜினியை போட்டோ எடுக்கறோம்னு எனக்கு உறைச்சுதுகை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சு, சும்மா நச்சு நச்சுன்னு, எடுத்தேன் பாருங்க போட்டோ, கமல் என்னை அப்போ பார்த்து இருந்தாருன்னா, "ச்சே, இவன் ஸ்டைலை நாம முன்னாடியே பார்த்து இருந்தா அப்படியே டிக் டிக் டிக் பாலோ பண்ணி இருக்கலாமேன்னு" நினைச்சு இருப்பாரு.

எல்லாம் முடிஞ்சு, ரஜினி கிட்ட வழிஞ்சு, போடோகிராப்புக்கு அப்புறம் ஆட்டோகிராப் எல்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தோம்ரஜினி ரசிகரு வீடு வரைக்கும் பேய் அரஞ்சாப் போல வந்தாருசிவாஜி ரசிகருக்கும், கமல் ரசிகருக்கும் அவங்க அவங்க பீலிங்க்ஸ்பொண்ணுங்க எல்லாம், "அப்பாடா, இவனுங்களோட வந்த இந்த டிரிப் எந்த வில்லங்கமும் இல்லாம முடிஞ்சுதேன்னு" எல்லா மதத்தோட தெய்வத்துக்க்கும் நன்றி சொல்லிகிட்டே வந்தாங்க

பிலிம் ரோலை லேப்ல குடுத்து டெவெலப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற பொறுப்பை ரஜினி ரசிகர் ஏத்துக்கிட்டாறுமறு நாளு எங்க மீட்டிங் இடமான எங்க டீச்சர் வீட்டுக்கு எல்லோரும் போட்டோவை பார்க்க போனோம்ரஜினி ரசிகர் போட்டோவை வாங்கிட்டு அங்க வந்தாரு. முகத்துல நட்பே இல்ல. அது போட்டவை பார்த்ததும் தான் தெரிஞ்சுதுஅந்த காலத்துல Elpaar Suitings அப்படீன்னு ஒரு விளம்பரம் வரும்அதுல ஆளுங்களோட தலை மட்டும் இருக்காது. கழுத்து வரைக்கும் கட் பன்னி வெறும் கோட், சூட் தான் இருக்கும்அதே மாதிரி இருந்தது நம்ம போட்டோஸ்ரஜினி இருந்த போட்டோவுல அவர் கூட ஏதோ ஒரு ரெண்டு பேரு இருந்த மாதிரி இருந்ததுரஜினியே உத்து பார்த்தா தான் தெரிஞ்சாருஏன்னா பதட்டத்துல பிளாஷை ஆப் பண்ணிட்டு இருட்டுல படம் எடுத்து இருக்கேன்

தங்களோட கல்யாண போட்டோ காலியாயி இருந்தா கூட பய புள்ளைங்க இவ்வளவு பீல் பண்ணி இருக்காதுங்க. ரஜினியோட இருந்த போட்டோ போச்சேன்னு எல்லாரும் ரொம்ப நாள் என்னை ஜன்ம விரோதி மாதிரியே விலக்கி வச்சாங்க. அப்புறம் ஒரு வழியா நமக்கு பொது மன்னிப்பு குடுத்தாங்க. 


ரஜினி ரசிகர் மட்டும் ரொம்ப நாளு, ஒரு கவுண்டமணி படத்துலே கிழவி ஒன்னு "போச்சே, போச்சே" ன்னு அந்தமாவோட பாடி ஒன்னு கிணத்துல விழுந்ததுக்கு புலம்பிக்கிட்டு இருக்குமே, அதே மாதிரி புலம்பிக்கிட்டு இருந்தாரு. கொஞ்ச நாளு அவரை கவனிக்காம விட்டு இருந்தா, உச்சந்தலையில  கைய வச்சுக்கிட்டு, ...ங்க...ங்க...ங்க...ங்க... ன்னு திரிஞ்சிக்கிட்டு இருந்து இருப்பாரு. நல்ல வேளை அப்படி ஏதும் ஆகலை.

என்னா செய்யறது, விதி வலியது!



No comments:

Post a Comment