மன்னிக்கனும் மக்களே! ரொம்ப
நாள் ஆச்சு. காரணம் எதுவுமில்லை.
கேபிள்
அண்ணன் எல்லாம் பின்னூட்டம் போட்டது எனக்கு கிடைச்ச அங்கீகாரம். அவருக்கும், மற்றவர்களுக்கும் நன்றி.
நேற்று
ஒரு பெரியவர் ஒரு அருமையான வாழ்க்கை தெளிவுரை சொன்னார். சும்மா நச்சுன்னு
இருந்தது. அவரு என்ன சொன்னாருன்னா...
"மக்கள் பிறந்த நாள் கொண்டாடுறது தப்பு இல்லை. ஆனா
எல்லாரும், 80 வயசு
கிழவன் பிறந்த நாள் கொண்டாடினாலும், இன்னும் நீண்ட
நாள் வாழ வாழ்த்துக்கள் அப்படீன்னு வாழ்த்தறது சம்பிரதாயமான அபத்தமா போச்சு. பிறந்த
நாள் என்பது நெடுஞ்சாலையில் நட்டு வச்சு இருக்குற மைல் கல் மாதிரி. ஒரே
வித்தியாசம், நெடுஞ்சாலை
மைல் கல் இன்னும் போகப் போற தூரத்தை சொல்லும். பிறந்த
நாள் என்னும் மைல் கல் வாழ்கை பயணத்தில் எவ்வளவு தூரம்
கடந்து வந்து
இருக்கீங்கன்னு சொல்லும். கொஞ்சம்
சுய பரிசோதனை செய்து கொள்பவர்களாய் இருந்தால், 'இத்தனை வருஷம் கடந்திருக்கியே எதையாவது உருப்படியா செஞ்சு இருக்கியா?' அப்படீன்னு அந்த மைல் கல்
உணர்தற மாதிரி நினைப்பாங்க.
மக்கள்
இந்த உலகத்துக்கு வந்த முதல்
நாள்லே இருந்து தனக்கு என்ன வேனும் அப்படீன்னு தான் நினைக்கிறாங்களே
தவிர, இந்த
உலகத்துக்கு தான்
என்ன குடுக்க போறோம்னு நினைக்கிறதே இல்லை. ஒவ்வொரு மனிதனும் 'தனக்கு கிடைக்கனும்னு
நினைக்கிறதை விட்டு விட்டு, மற்றவர்க்கு
கொடுக்கணும்னு நினைச்சா', இந்த
உலகமே ஒரு சொர்க்கபுரியா மாறிடும். ஏன் நான்
குடுக்கணும்னு நினைச்சா, இப்ப
நீங்க அனுபவிசிக்கிட்டு இருக்கிற இந்த வாழ்க்கை உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள்
உங்களுக்காக உருவாக்கி விட்டுச் சென்றது தான் அப்படீன்னு நினைக்கணும். தேவர்
மகன் படத்துல ஐயா சிவாஜி சொன்னது ஞாபகம் வருதா. விதை
நீ போட்டது, பழத்தை
உன் பேரன் சாப்பிடுவான்."
ரொம்ப
சொறிஞ்சிட்டேனோ? நல்லா
இருந்தா முதுகுல தட்டுங்க. இல்லேன்னா மண்டையில தட்டுங்க.
சீக்கிரம்
சந்திப்போம்.
No comments:
Post a Comment