நம்ம பாக்கியராஜ் ரசிகர் கொஞ்ச நாள் ஒரு மெடிக்கல் ஸ்டோர் ல வேலை பார்த்தாரு. நமக்கு தான் யாராவது உருப்படியா ஏதாவது செஞ்சா குறு குறு ன்னுமே. ஒரு நாளு நானும் Neutral Party யும் அவுரு கடைக்கு போய் அன்னாத்தையே சினிமாவுக்கு தள்ளிக்கிட்டு போலாம்னு பிளான் பண்ணோம்.
கடை கிட்டே நம்ம NP ஒரு கஸ்டமர் சர்வீஸ் பண்ணப் போய், பாக்கியராஜ் ரசிகர் வேலைக்கு உலை வைக்கப் பார்த்தாரு.
ஒரு கிழவி கடைக்கு வந்து, "ஐயா, கண்ணு ரெண்டு நாளா ஒரே எரிச்சல். எதாவது மருந்து குடுய்யா. அப்படியே என் பேரனுக்கு அடி பட்டு இருக்கு அதுக்கும் ஒரு ஆயின்ட்மென்ட் குடுய்யா" அப்படீன்னு கேட்டாங்க.
நம்ம ஆளும் ரொம்ப சின்சியரா, டாக்டர் லெவலுக்கு இல்லேன்னாலும், கம்பவுண்டர் லெவலுக்கு சில கேள்வி எல்லாம் கேட்டுட்டு, மருந்து எடுத்துட்டு வர கடைக்கு உள்ள போனாரு.
அப்போ பார்த்து நம்ம NP ரொம்ப அக்கறையா அந்த கிழவி கிட்ட சொல்றாரு, "இதோ பாரும்மா, கண்ணு மருந்தையும், புண்ணு மருந்தையும் தனித் தனியா வச்சுக்கணும். சேர்த்து வச்சா அப்புறம் கன்பீஸ் ஆயி பெரிய பிரச்சினை ஆயிடும்" அப்படீன்னு அந்த அப்பாவி கிழவியை கலவரப் படுத்திட்டாரு.
கிழவி மிரண்டு போய், "என்னா கண்ணு சொல்ற?" அப்படீன்னு கேக்க, NP சொன்னாரு பாருங்க ஒரு வியாக்கியானம். அது அலோபதி, ஓமியோபதி, ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி அப்படீன்னு எல்லா மருத்துவ முறையிலும் பொன் எழுத்துல பொரிச்சு வைக்கணும்.
NP சொல்றாரு "இதோ பாரும்மா, உன் கண்ணுக்கு போட வேண்டிய மருந்தை உன் பேரன் புண்ணுக்கு போட்டா, புண்ணுக்கு ஒன்னும் ஆகாது. ஆனா உன் பேரனோட புண்ணுக்கு போட வேண்டிய மருந்தை, உன் கண்ணுக்கு போட்டா உன் கண்ணு புண்ணு ஆயிடும். அதனாலே ஜாக்கிரதை." அப்படீன்னு சீரியஸா சொல்றாரு.
அந்த கிழவிக்கு அப்போவே, கண்ணுல தாரை தாரையா தண்ணி வருது. அது நம்ம ஆளு சொன்னதை கேட்டு ஜெர்க் ஆனதாலையா, இல்ல, கண்ணு வலியான்னு தெரியலே. "இன்னாப்பா சொல்றாரு இவுரு" அப்படீன்னு பக்கத்துல ஒருத்தர் கிட்ட கேக்குது. கிரகம் பாருங்க அவுரு தான் மெடிகல் ஷாப் ஓனரு. எப்பவுமே நம்மளை அவரு நட்போட பார்த்ததே இல்ல. கடைக்கு உள்ள போய் நம்ம ஆள ஒரு அதட்டலோட கூப்பிட்டாரு. அப்பவே எங்களுக்கு சிக்னல் கிடைச்சிடுச்சி, இடத்தை காலி பண்ணனும்னு.
மறு நாளு காலையில நம்ம பாக்கியராஜ் ரசிகரை அவங்க வீட்டுல பார்க்கப் போனோம். அவங்க அப்பச்சி, எங்களை பார்த்து "ஏண்டா அவன் ஒரு மாதிரி இருக்கான்?" அப்படீன்னு கேக்கறாரு.
ஒரு யூகமா எங்களுக்கு காரணம் தெரிஞ்சாலும், "ஏண்டா?" அப்படீன்னு 'அக்கறையா' கேட்டா, அதுக்கு அவன் விரக்தியா, "வாழ்க்கை ஒரு சிறைடா. பறவை போல சுதந்திரம் வேணும்டா. அதுங்களுக்கு எல்லாம் வேலை இருக்கா? முதலாளி இருக்காரா? இல்லை பிரண்ட்ஸ் தான் இருக்காங்களா? ஆனா அதுங்களுக்கு இருக்குற சந்தோஷம் நமக்கு இல்லைடா ." அப்படீன்னு தத்துவம் பேசறான்.
நான் NP யை பார்க்க, அவன் கூலா அவனை பார்த்து, "விடுறா, வாழ்க்கையில இன்னும் எத்தனையோ சோதனை இருக்கு. இதுக்கே இப்படி டர் ஆயிட்டா எப்படி" அப்படீன்றான்.

No comments:
Post a Comment