நம்ம ஊர்ல எடுக்குற படங்கள்ல
சில அபத்தக் காட்சிகளை பார்த்துட்டு,
இன்னும் எப்போதாண்டா திருந்தப்
போறோம்னு தோணும். உங்களுக்கும்
பல முறை அப்படி தோணி
இருக்கும். எனக்கு
பளிச்சுன்னு பட்ட பத்து அபத்தங்கள்.
1 . காமெடின்னு
நினைச்சுக்கிட்டு, காலேஜுல பத்து வருஷமா
ஒரு சீனியர் பெயில் ஆயி
அதே வகுப்புல படிச்சிக்கிட்டு இருக்காருன்னு காட்டுவாங்க. ‘சச்சின்’ல
வடிவேலு மாதிரி. பத்தாவது
பெயில் ஆனாலே, திரும்ப பள்ளிகூடத்துக்கு
போக முடியாது, இதுல காலேஜுல பெயிலாயி
அங்கேயே படிக்கிறாங்களாம். பாக்குற
நாம தான் முட்டாளா, இல்ல
எடுத்த டைரக்டரு தான் ..........?
2 . 10 செகண்ட்
ல 0 - 60 KMPH speed எடுக்குற கார்ல, வில்லனோட ஆளுங்க,
காலி மைதானத்துல முன்னாடி ஓடுற கதாநாயகனையும், அவன்
காதலி, பிரண்ட்ஸ், குடும்பம் எல்லாரையும், 5 கிலோ மீட்டர் வரைக்கும்,
பிடிக்க முடியாம பின்னாடியே துரத்திக்கிட்டே
போவாங்க பாருங்க, அது சரியான காமெடி.
3 . கதாநாயகனை
பார்த்தவுடனே, கண்டம் துண்டமா வெட்டி
போடணும்னு வெறியோட, 10 , 20 பேரோட
வர்ற வில்லன், அவனை பார்த்தவுடனே வெட்டி
போடாம, ஸ்கூல் பசங்க பிரேயர்ல
நிக்கிற மாதிரி அசெம்பிளி ஆகி,
நின்னு டயலாக் பேசுறது ஏன்னு தெரியல.
4 . அதுக்கு
அப்புறம் வில்லன், ஒரு பக்கம் திரும்பி
கண்ணு காட்ட, அவுருடைய அடியாளு
ஒருத்தர் மட்டும், ஏதோ கிரிகெட்ல, பாஸ்ட்
பௌலர் ஓடி வந்து பௌலிங்
பண்ணுற மாதிரி "ஏய்....." அப்படீன்னு
கத்திக்கிட்டே ஒரு 100 மீட்டர் ஓடி
வருவாரு. அதுவரைக்கும்
காட்டுத்தனமா துரத்திக்கிட்டு ஓடி வந்த மத்த அடியாளுங்க
எல்லாம் பெவிலியன்ல பேட்டிங் போக காத்துக்கிட்டு இருக்குற
பேட்ஸ்மேன் மாதிரி, முதல்ல ஓடினவரு
கண்டிப்பா அவுட் ஆவாரு, அப்புறம்
போய்க்கலாம் ன்ர மாதிரியே நிப்பாங்க.
5 . கத்தியோட,
கத்திக்கிட்டே வர்ர அடியாளை, பௌன்சர்
பந்துக்கு குனியற பேட்ஸ்மேன் மாதிரியே,
குனிஞ்சு, அடியாளோட வயித்துல ஒரு பன்ச் குடுப்பாரு
கதாநாயகன். ஒன்னு
அடியாளு அந்த ஸ்பாட்லேயே மூச்சு
பேச்சு இல்லாம விழுவாரு, இல்லேன்னா
சென்னையில விட்ட குத்துக்கு, அங்க
இருக்குற டீ கடை, அலுமினிய
பாத்திர கடை, செங்கல் சுவரு,
விளம்பர பேனரு,
மீன் பாடி வண்டி எல்லாத்தையும்
இடிச்சிகிட்டு, ஒடைச்சிகிட்டு, பறந்து
போய், செங்கல்பட்டுல விழுவாரு.
6 . அப்புறம்
கூட மத்த அடியாளுங்க எல்லாம்
ஒண்ணா வருவாங்கன்னு நினைச்சீங்கன்னா நீங்க தமிழ் படமே
பார்த்தது இல்லைன்னு தான் அர்த்தம். அப்புறம் கூட ஒவ்வொருத்தரா தான்
வரிசையில ஓடி வந்து, கதாநாயகன்
விடற குத்துக்கு வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி,
ஓசூர் மார்கமாக ஊருக்கு ஒவ்வொருத்தரா போய் விழுவாங்க.
7 . பத்தாங்கிளாஸ்
கூட பாஸ் பண்ணாம வேலை
வெட்டியே இல்லாம தறுதலையா சுத்திக்கிட்டு
இருப்பாரு கதாநாயகன். அப்பா
பார்த்தா ரொம்ப சாதாரணமான வேலையில
தான் இருப்பாரு. ஆனா
கதாநாயகன் போடுற பேன்ட், சர்ட்
எல்லாம் அடேங்கப்பா ரகமா தான் இருக்கும். வெட்டியா,
பொறுக்கியா சுத்திக்கிட்டு இருக்குற நம்ம ஆளு மேல,
ரிசர்வ்டா, பொறுப்பா, அழகா, பெரிய நிறுவனத்துல
நல்ல வேலையில இருக்குற பொண்ணுக்கு
தான் காதல் வரும். முன்னாடி எல்லாம் கதாநாயகன் ஏழை,
ஆனா நல்லவன், பண்புள்ளவன் அப்படீன்னா காதல் வரும். ஆனா இப்பல்லாம் கொஞ்சம்
டெவலப் ஆயி, பொறுக்கிங்க, பொறம்போக்குங்க
மேல எல்லாம் BE படிச்ச, IT வேலையில இருக்குற பெண்களுக்கு
காதல் வரும். ஏண்டா ஒரு அளவே இல்லையா?
8 . கதாநாயகன் பெரிய பிசினெஸ்மேனாவோ இல்லேன்னா ஹை டெக் தாதாவாகவோ இருந்துட்டாருன்னா போதும், அவருக்கும், அவரோட அல்லக்கைகளுக்கும் கண்டிப்பா கோட், சூட் தான் காஸ்ட்யூம். கதாநாயகனுக்கு எக்ஸ்ட்ராவா கருப்பு கூலிங் கிளாஸ். அவுரு ஆபீஸ் போனாலும் சரி, ஆய் போனாலும் சரி, அவுரு முன்னாடி நடக்க, அல்லக்கைங்க எல்லாம் பின்னாடி ஒரு லைன்ல தான் வரணும். எக்ஸ்ட்ரா பில்ட்-அப்புக்கு கதாநாயகன் வாயில சுருட்டும், காதுல செல்போனும் வச்சுக்கிட்டு வரணும். செல் போன் பேசறது எல்லாம் ஒரு பில்ட்-அப்புன்னு இன்னும் காட்டுறானுன்களே, கொடுமைடா சாமி.
9 . இந்தியாவுல இருக்குற மிகப் பெரிய நிறுவனம் ஒன்னுக்கு MD யா ஒரு கதாபாத்திரம் இருக்கும். அவங்க கம்பெனியில machine ல வேலை செய்யிற கீழ் நிலை தொழிலாளிக்கு, அவங்க ஆயா வயசுக்கு வந்துட்டாங்க, அம்மாவுக்கு பேதி, அப்பா மண்டைய போட்டுட்டாரு, அதனால ஒரு நாள் லீவ் வேணும்னா கூட நம்ம MD கிட்ட தான் போய் அழுவாங்க. MD தான் கால் மேல கால் போட்டுகிட்டோ, வாயில பைப் வச்சுக்கிட்டோ, லீவ் குடுப்பேன், குடுக்க மாட்டேன்னு சொல்வாங்க.
10 . நம்ம கதாநாயகருங்க எல்லாம் 'கருத்து கந்தசாமியா' மாறி உபதேசம் பண்ற கொடுமை இருக்கே, 'கொலைவெறி' தான். அதுவும் பொண்ணுங்களுக்கு இவனுங்க குடுக்குற அட்வைஸ், ங்கொய்யால நொய்யரிசி தான். டிரஸ்ஸை இப்படி போடக் கூடாது, ரோடுல அப்படி நடக்கக்கூடாது, ரோஸ் கலர் புடவை கட்டுனா, தலையில கனகாம்பரம் வைக்கணும், வெள்ளிகிழமையான ரெட்டை ஜடை போடணும்னு, இவனுங்க அடுக்கிக்கிட்டே போற அலப்பறைக்கு அளவே கிடையாது. ஆனா இவனுங்க மட்டும் இறகு பிச்சி போட்ட கோழி மாதிரி தலையில இருந்து கால் வரைக்கும் ஒரு ஏடாகூட கெட்டப்புல படம் பூரா சுத்துவானுங்கோ.
என்ன படிச்சாச்சா?
சிப்பு சிப்பா வந்தாலும், துப்பு துப்பா
வந்தாலும் அதை கமெண்டுல போடுங்கோ!