Tuesday, November 29, 2011

சூப்பர் ஸ்டார் கூட ஒரு போட்டோ!


நமக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் சினிமாவுல இருந்தார்.  ரொம்ப வருஷத்துக்கு முன்னால, ஒரு நாள் அவர் எங்க எல்லாரயும், பிரசாத் ஸ்டூடியோவுல ஒரு ரஜினி பட பூஜையில கலந்துக்கறத்துக்கு ஏற்பாடு செஞ்சாருஅது ஒரு பெரிய இயக்குணருடைய படம்சினிமாவுல இருந்து பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லோரும் கலந்துக்கிட்ட ஒரு பெரிய திரையுலக விழாகமல் வருவாக, சிவாஜி வருவாக, மற்றும்  திரையுலக மக்கள் எல்லாம் வருவாக அப்படீன்னு சொன்ன உடனே ரெண்டு நாளுக்கு முன்னாலேயே தூங்காம, கொள்ளாம  சுத்தி விட்ட கோழி மாதிரி எல்லாரும் ஒரு மார்கமா கிடந்தோம். வர்ற எல்லாரோடையும், குறிப்பா ரஜினி, கமல் கூட எப்படியாவது போட்டோ எடுத்தக்கனும்னு, இரவல் காமெரா, காசெல்லாம் சேர்த்து  பிலிம் ரோல் எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டு, நம்ம கிட்ட கிடந்த ஒன்னு ரெண்டு செட் பேன்ட், சட்டையிலேயே எதை போட்டுக்கலாம்னு குழம்பி, சரி எதுக்கும் இருக்கட்டும்னு ரெண்டையுமே அதுங்க கதற கதற, தோய்ச்சு, தேய்ச்சு, முதல் நாள் காலையிலேயே ஹாங்கர்ல தொங்க விட்டாச்சுஅப்புறம் நமக்கு 1 ரூபா ஷாம்பூ எல்லாம் வாங்கி வச்சாச்சு.

காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பறதுன்னு பிளான்மூணு மணிக்கெல்லாம் எழுந்து, இருட்டுல கிழவி காலை எல்லாம் மிதிச்சி, துப்பு வாங்கி, இருந்த ரெண்டு செட் டிரஸ்ல, கமலுக்கு கவுன்ட்டர் குடுக்கற மாதிரி ஒன்னை செலக்ட் பண்ணி போட்டுக்கிட்டு கிளம்பியாச்சு.   பசங்க, பொண்ணுங்கன்னு நம்ம குரூப் ஒண்ணா ஜமா சேர்ந்து பஸ்ஸை புடிச்சி 10 மணி பூஜைக்கு 8 மணிக்கெல்லாம் பிரசாத்துல நாங்க ஆஜர்.

ஒரு ரோல் போட்டோ தான் இல்லையா, அதனால எங்க குரூப்புக்குள்ள ஆளாளுக்கு, எத்தனை போட்டோன்னு ஒரு சின்ன ஒப்பந்தம் வேறநம்ம ரஜினி ரசிகரும், கமல் ரசிகர் ஒருத்தரும் அவங்க அவங்க தலைவர்களோட கண்டிப்பா சோலோ ரெண்டு அப்படீன்னு வேற பிக்ஸ் பண்ணிக்கிட்டாங்கநம்ம பொண்ணுங்க பாவம், இவனுங்களோட வீட்டுக்கு போய் சேர்ற வரைக்கும் நமக்கு ராகு காலம் தான்னு கொஞ்சம் கலவரத்தோடேயே இருந்தாங்கஎங்களுக்கு ரெண்டு குரூப் போட்டோ மட்டும் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டு அமைதி ஆயிட்டாங்கவேற வழி.

ஒம்போதரை மணிக்கு மேல ஒவ்வொரு நட்சத்திரமா வராங்கரம்யா கிருஷ்ணனை திடீர்னு அவ்வளவு கிட்டத்துல பார்த்ததும் கிர்ருனு ஆயிடுச்சி.   பாண்டிய ராஜன்  ஏதோ நம்ம சொந்த அண்ணாத்தை மாதிரி ரொம்ப சாதாரணமா நடந்து போறதை பார்த்து ஒரே ஆச்சர்யம்இளையராஜா நடந்து போகும் போது ஏதோ ஒரு சாமியார் போற மாதிரி அவ்வளவு அமைதிசிவக்குமார், சாருஹாசன் எல்லாம் வராங்கரேகாவை பார்த்து பொளந்த வாய் மூடவே இல்லைஅவ்வளவு அழகு அவங்க

சிவாஜி வரமாட்டார்னு பேசிக்கிட்டாங்க. நம்ம சிவாஜி ரசிகர் 'எங்கே நிம்மதி' சிவாஜி மாதிரியே ஆயிட்டாரு. கமலும், ரஜினியும் இன்னும் வரலேகடைசியிலே ரஜினி கூட வந்துட்டாரு.  சிம்பிளா கருப்பு ஜீன்ஸ், கோடு போட்ட சட்டையில ஸ்டைலா வேகமா நடந்து வந்தாரு. நம்ம ரஜினி ரசிகர், திருப்பதி பெருமாளை கிட்டக்க பார்த்த பரவசத்துலே சிலையா நின்னுட்டாருகன்னத்துல மட்டும் போட்டுக்கலேகமல் கடைசி வரைக்கும் வரவே இல்லேநம்ம கமல் ரசிகர் அப்படியே கான்சர் வந்த வாழ்வே மாயம்  கமல் மாதிரியே ஒரு பொசிஷன்ல போய் நின்னுட்டாரு.

பூஜை அமர்களமா ஆரம்பிச்சு நடந்து முடிஞ்சுதுகாமெரா நம்ம கையில இருந்ததுனால, கண்ணு பாக்குற அத்தனையும் சும்மா டிக் டிக் டிக் கமல் பீலிங்குல அடிச்சு தள்ளிக்கிட்டு இருந்தேன்திடீர்னு நம்ம ரஜினி ரசிகர் சுய நினைவுக்கு வந்து, "டேய், தலைவரோட போட்டோ எடுக்கனும்டாசும்மா வேஸ்ட் பண்ணிட்டியே" அப்படீன்னு கொதிச்சு போய் , எத்தனை எடுத்து இருக்கேன் இன்னும் எத்தனை பாக்கின்னு ஆடிட் பண்ண ஆரம்பிச்சிட்டாருஆனா நான் அதுக்கு முன்னாடியே ஒரு 25 போட்டோ காலி  பண்ணி அடுத்த ஷாட் என்னன்னு ஒரு கலை தாகத்தோட காத்து கிடந்தேன்கமல் வரலேன்னதும் கமல் ரசிகரோட சோலோ ஷாட் மிச்சம் அப்படீன்னு கணக்கு போட்டு நம்ம ரஜினி ரசிகரு, தயங்கி தயங்கி, ஸ்டைலா தம் அடிச்சுக்கிட்டு இருந்த ரஜினிக்கிட்ட போய் போட்டோ எடுக்க பெர்மிஷன் வாங்கிட்டாருஎல்லாருக்கும் ஒரே பரவசம்போய் ரஜினி பக்கத்துல நின்னுகிட்டாங்க

நான் அப்படியே போட்டோ எடுக்குற நம்மளை யாரோ போட்டோ எடுக்கற கணக்கா பயங்கர ஸ்டைலா எல்லாம் நின்னுகிட்டு வியு பைண்டர்ல, அப்படி பாக்குறேன், இப்படி பாக்குறேன், 120 டிகிரில வச்சு பாக்குறேன்.  "நம்மளை பாலச்சந்தர், SPM கூட இப்படி ஆங்கிள்  வச்சு பார்த்து இருக்க மாட்டாங்கன்னு" நினைச்சு இருப்பாரு ரஜினிநானும் சின்சியரா யாரும் மிஸ் ஆயிடக் கூடாதுன்னு, நீ கொஞ்சம் உள்ள வா, நீ கொஞ்சம் ரைட்ல போ அப்படீன்னு இன்ஸ்டிரக்ஷன்  எல்லாம் குடுத்துகிட்டு இருந்தேன்குரூப்புல நின்னவங்க எல்லாம் கடுப்பாயி, “டேய் சீக்கிரம் எடுடா” அப்படீன்னு பல்லை கடிச்சுக்கிட்டே திட்ட ஆரம்பிச்சுட்டாங்கஅப்போ தான் ரஜினியை போட்டோ எடுக்கறோம்னு எனக்கு உறைச்சுதுகை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சு, சும்மா நச்சு நச்சுன்னு, எடுத்தேன் பாருங்க போட்டோ, கமல் என்னை அப்போ பார்த்து இருந்தாருன்னா, "ச்சே, இவன் ஸ்டைலை நாம முன்னாடியே பார்த்து இருந்தா அப்படியே டிக் டிக் டிக் பாலோ பண்ணி இருக்கலாமேன்னு" நினைச்சு இருப்பாரு.

எல்லாம் முடிஞ்சு, ரஜினி கிட்ட வழிஞ்சு, போடோகிராப்புக்கு அப்புறம் ஆட்டோகிராப் எல்லாம் வாங்கிகிட்டு வெளிய வந்தோம்ரஜினி ரசிகரு வீடு வரைக்கும் பேய் அரஞ்சாப் போல வந்தாருசிவாஜி ரசிகருக்கும், கமல் ரசிகருக்கும் அவங்க அவங்க பீலிங்க்ஸ்பொண்ணுங்க எல்லாம், "அப்பாடா, இவனுங்களோட வந்த இந்த டிரிப் எந்த வில்லங்கமும் இல்லாம முடிஞ்சுதேன்னு" எல்லா மதத்தோட தெய்வத்துக்க்கும் நன்றி சொல்லிகிட்டே வந்தாங்க

பிலிம் ரோலை லேப்ல குடுத்து டெவெலப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ற பொறுப்பை ரஜினி ரசிகர் ஏத்துக்கிட்டாறுமறு நாளு எங்க மீட்டிங் இடமான எங்க டீச்சர் வீட்டுக்கு எல்லோரும் போட்டோவை பார்க்க போனோம்ரஜினி ரசிகர் போட்டோவை வாங்கிட்டு அங்க வந்தாரு. முகத்துல நட்பே இல்ல. அது போட்டவை பார்த்ததும் தான் தெரிஞ்சுதுஅந்த காலத்துல Elpaar Suitings அப்படீன்னு ஒரு விளம்பரம் வரும்அதுல ஆளுங்களோட தலை மட்டும் இருக்காது. கழுத்து வரைக்கும் கட் பன்னி வெறும் கோட், சூட் தான் இருக்கும்அதே மாதிரி இருந்தது நம்ம போட்டோஸ்ரஜினி இருந்த போட்டோவுல அவர் கூட ஏதோ ஒரு ரெண்டு பேரு இருந்த மாதிரி இருந்ததுரஜினியே உத்து பார்த்தா தான் தெரிஞ்சாருஏன்னா பதட்டத்துல பிளாஷை ஆப் பண்ணிட்டு இருட்டுல படம் எடுத்து இருக்கேன்

தங்களோட கல்யாண போட்டோ காலியாயி இருந்தா கூட பய புள்ளைங்க இவ்வளவு பீல் பண்ணி இருக்காதுங்க. ரஜினியோட இருந்த போட்டோ போச்சேன்னு எல்லாரும் ரொம்ப நாள் என்னை ஜன்ம விரோதி மாதிரியே விலக்கி வச்சாங்க. அப்புறம் ஒரு வழியா நமக்கு பொது மன்னிப்பு குடுத்தாங்க. 


ரஜினி ரசிகர் மட்டும் ரொம்ப நாளு, ஒரு கவுண்டமணி படத்துலே கிழவி ஒன்னு "போச்சே, போச்சே" ன்னு அந்தமாவோட பாடி ஒன்னு கிணத்துல விழுந்ததுக்கு புலம்பிக்கிட்டு இருக்குமே, அதே மாதிரி புலம்பிக்கிட்டு இருந்தாரு. கொஞ்ச நாளு அவரை கவனிக்காம விட்டு இருந்தா, உச்சந்தலையில  கைய வச்சுக்கிட்டு, ...ங்க...ங்க...ங்க...ங்க... ன்னு திரிஞ்சிக்கிட்டு இருந்து இருப்பாரு. நல்ல வேளை அப்படி ஏதும் ஆகலை.

என்னா செய்யறது, விதி வலியது!



Friday, November 25, 2011

Stoning of Soraya M

Stoning of Soraya M என்ற ஒரு அற்புதமான பெர்சிய மொழி திரைப் படத்தை பார்த்தேன்.  2008 இல் வெளியான இந்த திரைப் படம் ஈரான் நாட்டு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மிக அற்புதமாக பதிவு செய்து இருக்கிறது.  நீண்ட நாள் கழித்து கண்கள் கலங்க நான் பார்த்த ஒரு படம் இது.


குஹ்ப்பாயே  என்ற ஈரான் நாட்டு கிராமத்தில், கணவன் அலி, மனைவி சொராயா, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் கொண்ட ஒரு குடும்பம்.  அழகான, அமைதியான, அன்பான பெண் சொராயா. அலிக்கு, மனைவி சொராயாவை கண்டாலே பிடிப்பதில்லை.   அவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு ஊரில் இருக்கும் ஒரு 14 வயது பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள திட்டமிடுகிறான்.  விவாகரத்துக்கு சம்மதித்தால் கணவனிடம் இருந்து பொருளாதார உதவி கிடைக்காது, அதனால் தன் குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்பதால் சொராயா விவாகரத்திற்கு மறுக்கிறாள்.  


இதனால் ஆத்திரமடையும் அலி எப்படியாவது சொராயாவை ஒழித்துக்கட்டிவிட்டால், தன் மறுமணத்திற்கு தடை இருக்காது என்று திட்டமிடுகிறான்.  அந்த ஊர் முல்லாவை (நம்ம கிராமத்து பஞ்சாயத்து தலைவர் மாதிரி), கைக்குள் போட்டுக் கொண்டு, தன் மனைவி சொராயா இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்து இருக்கிறாள் என்று பொய்யாக புகார் செய்து ஊரை நம்ப வைக்கிறான்.  அந்த ஊர் சட்டப்படி, கள்ள தொடர்பு குற்றத்திற்கு, ஊர் நடுவில், பெண்ணின் கைகளை பின்புறம் கட்டி. இடுப்புக்கு மேற்புறம் மட்டும் தெரியும் வகையில், 3 அடி குழியில் புதைத்து, ஊரில் உள்ள எல்லோரும், அந்த பெண்ணை கல்லால் அடித்து கொல்வது தான் தண்டனை.  ஆனால் கள்ள தொடர்பில் ஈடுபட்ட ஆணுக்கு எந்த தண்டனையும் இல்லை.  இன்னொரு கொடுமை, கணவன் உட்பட வெறும் இரண்டு சாட்சிகளுடன் குற்றம் சாட்டப்பட்டு இருந்தாலும், தான் குற்றமற்றவள் என்று பெண் தான் நிரூபிக்க வேண்டும். அதே சமயம் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருக்கிறான் என்று ஒரு பெண் குற்றம் சாட்டினாலும் அதையும் அந்த பெண் தான் நிரூபிக்க வேண்டும். 


சொராயாவிற்கு ஒரே ஆதரவு அவளுடைய அத்தை மட்டுமே.  குற்றச்சாட்டு பொய் என தெரிந்தும் பெண்களுக்கு சற்றும் சாதகமில்லாத அந்த ஊரின் பழமைவாத, ஆணாதிக்க, சட்ட திட்டங்களை எதிர்க்கவும் முடியாமல், சமாளிக்கவும் முடியாமல், நிரபராதி என்று நிரூபிக்க வாய்ப்பும் இல்லாமல் அந்த பெண்கள் படும் பாடு நம்மை ரொம்பவே பாதிக்கிறது. சொராயாவிற்கு ஊர் நடுவில் வைத்து கல்லால் அடித்து மரண தண்டனை என்று தீர்ப்பாகிறது.


தீர்ப்பு அறிவித்த சில மணி நேரத்திலேயே தண்டனை.  இன்னும் சிறிது நேரத்தில் தண்டனை நிறைவேறப்போகிறது.  வீட்டுக் காவலில் இருக்கும் அந்த இரண்டு பெண்களின் பயமும், கலக்கமும் நம்மையும் தொற்றிக்கொண்டு நம்மை என்னவோ செய்கிறது. அத்தை, சொராயாவை பார்த்து கலக்கத்துடன் "பயமாய் இருக்கிறதா?" என்று கேட்கிறாள். அதற்க்கு சொராயா, "சாவை கண்டு நான் பயப்படவில்லை, ஆனால் சாகப் போகும் கணங்களை நினைத்தால் தான் பயமாய் இருக்கிறது.  கற்கள், அடி, வலி....." என்கிறாள்.  எப்படிப்பட்டவர்களையும் கலங்க வைக்கும் காட்சி அது.


எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்படும் தன் மீது, தன் தந்தை, கணவனுக்கு பிறகு, மகன்களும் கல் எறியும் போது, "நீங்களுமா?", என்று அடிபட்ட பறவை போல் சொராயா பரிதாபமாய் பார்க்கும் காட்சி...ப்ச்.... நெஞ்சு அடைத்துக் கொள்கிறது.


மதத்தின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தின் அராஜகமான கட்டுப்பாடுகளை இந்த படம் வலியுடன், அழுத்தமாக பதிவு செய்கிறது. மனித சமுதாயம் இன்னும் முழுமையாக நாகரீக வளர்ச்சி அடையாமல் காடுமிராண்டிகளாக தான் இருக்கிறார்கள் என்று முகத்தில் அறைந்தார் போல் சொல்கிறது இந்த படம். 


இரானின் அமைதியான, அழகான கிராமத்தின் ஒவ்வொரு காட்சியும் கண் கொள்ளா அழகு.  நிகழ்வுகளின் பாரத்தை நம்முள் இறக்கி வைக்கும் அற்புதமான இசை.


இதயம் கணக்க பார்க்கும் நமக்கு சின்ன ஆறுதலாக கடைசி காட்சி.  படம் முழுதும் பார்க்கும் நமக்கு வலி தான் என்றாலும், அதை காட்சிப் படுத்திய விதத்திற்கும்,அது நம்முள் ஏற்படுத்தும் பாதிப்பிற்கும், கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் இது.  இதை பார்த்தவுடன் பெண்கள் மீது நமக்கு அன்பும், கருணையும், மதிப்பும் இன்னும் கூடும். 


நிச்சயம் பாருங்கள் Stoning of Soraya M ! 

Wednesday, November 23, 2011

நீங்க நல்லா இருக்கோணும் !



þÐ ¿¼óÐ ´Õ ¿¡Ö ÅÕ„õ þÕìÌõ. ´Õ þ¨Ç»§Ã¡¼ §Àº¢ì¸¢ðÎ þÕóò§¾ý.  «Å÷ ´Õ Mr.Perfect. ƒ¢õÓìÌ ±øÄ¡õ §À¡ö ¯¼õ¨À ÍõÁ¡ ÌõÓýÛ ÅÕôÀ¡Õ. "¿øÄ¡ ¯¼õ¨À ÅîÍ þÕ츣í¸" «ôÀËýÛ ¦º¡ý§Éý.

«ÐìÌ «Å÷, "þÐìÌ ¸¡Ã½õ ´Õ ¦Àñ ÌÆó¨¾" «ôÀËýÉ¡Õ. 

±ÉìÌ ¬îº¡¢Âõ. "±ôÀÊ?"

«Å÷, "¿¡ý ´Õ ¸¡ÄòÐÄ ¾ñ½¢, ¾õÓ ±øÄ¡õ «ÊîÍ ´Õ Á¡÷ì¸Á¡ ¾¡ý þÕó§¾ý.  ´Õ ¿¡û ¸ýÏ ÁýÏ ¦¾¡¢Â¡Á ÓØ §À¡¨¾Â¢Ä Å£ðÎÄ ÀôÀÃôÀ¡ýÛ ÀÎòÐ ¸¢¼ó¾ôô§À¡, ±ý ¿ñÀ÷¸û ÅóÐ ±ý¨É «Ê측¾ ̨È¡ ±ØôÀ¢ À¡÷ò¾¡í¸.  ¿¡ý ±ó¾ ¯Ä¸òÐÄ þÕó§¾ýÛ ±É째 ¦¾¡¢Â§Ä.  ¦ÅÚòÐô §À¡ö §À¡öð¼¡í¸. 

ÁÚ¿¡û «Åí¸¨Ç ºó¾¢îºô§À¡, "§¼ö ÁÛ„É¡ ¿£. §¿òÐ ´Õ Å¢ÀòÐ ¿¼óÐ ´Õ ¦À¡ýÛìÌ O- Ãò¾õ §¾¨ÅôÀð¼Ð. ¯ÉìÌ ¾¡ý «ó¾ Ìåô ¬î§º «ôÀËýÛ ÅóÐ ¯ý¨É ±ØôÒÉ¡, ¯ÉìÌ ´Õ ±Æ×õ ¦¾¡¢Â§Ä. ¯ý¨É ±ØôÀ¢ þÕó¾¡Öõ ¯ý Ãò¾õ ¯À§Â¡¸ô ÀðÎ þÕ측Ð. §Àƒ¡Ã¡ §À¡îͼ¡" «ôÀËýÉ¡í¸.

þ¨¾ §¸ðÎ ¿¡ý ¦Ã¡õÀ «ô¦ºð.  Å£ðÎìÌ ÅóР¡ո¢ð§¼Ôõ §Àº¡Á «¨Á¾¢Â¡ ¯ì¸¡óÐð§¼ý.  ±í¸ «ôÀ¡ ¿ÁìÌ þý¦É¡Õ §¾¡Šò.  ¸¢ð¼ ÅóÐ, "±ýÉôÀ¡ ¬îÍ?" «ôÀËýÉ¡Õ.  ¿¡ý ±øÄ¡ò¨¾Ôõ «Å÷ ¸¢ð¼ ¦º¡ý§Éý.

«ô§À¡ «Å÷ ¦º¡ýÉ¡Õ, "Ãò¾ ¾¡Éõ «ôÀËýÃÐ «ÊôÀ¨¼Â¢Ä ´Õ ¯¼ÉÊ ¯¾Å¢.  ±øġáÖõ ¦ºö ÓÊÂÈ ±Ç¢Â ºã¸ ¦¾¡ñÎ «Ð ¾¡ý.  ¬É¡ «ÐìÌ ¿¡õ ¾Ì¾¢  ¯¨¼ÂÅḠþÕôÀÐ ¿ÁÐ ¸¼¨Á.  ¿õÓ¨¼Â ¯¾Å¢Ôõ ¾ÃÁ¡É¾¡ þÕì¸Ûõ.  Ãò¾ ¾¡Éõ ¦ºöÂÃÅí¸ ¯ûÇ ¡£¾¢Â¡ ¦Ã¡õÀ ¯Â÷ó¾Åí¸Ç¡ þÕó¾¡Öõ, ¯¼ø ¡£¾¢Â¡ ¿øÄ ¾Ì¾¢§Â¡¼ ¾í¸û ¯¼¨ÄÔõ, Ãò¾ò¨¾Ôõ ¬§Ã¡ì¸¢ÂÁ¡ ÅÕìÌÈÐ ¦Ã¡õÀ «Åº¢Âõ.  «¾É¡Ä, þÉ¢ ¿£ ±ôÀ×õ Ãò¾ ¾¡Éõ ¦ºö ¾Â¡÷ ¿¢¨Ä墀 ¯ý ¯¼õ¨À ¿øÄ¡ ÅîÍ째¡. «Ð ´Õ Ũ¸Â¢Ä ¯ý ºã¸ ¦¾¡ñÎìÌ ´Õ ¸ÕÅ¢Ôõ ܼ" «ôÀËýÉ¡Õ.

"ÁÚ¿¡§Ç ƒ¢õÓìÌ §À¡¸ ¬ÃõÀ¢îÍð§¼ý. ±É측¸ þø§ÄýÉ¡Öõ, ´Õ ºÓ¾¡Â ¦¾¡ñ¼¡ ¬§Ã¡ì¸¢ÂÁ¡É¾¡ ¿õÁ ¯¼Öõ, Ãò¾Óõ ÀÂýÀ¼ÛõÛ ±ôÀ×õ  ¯¼õ¨À ¾Â¡Ã¡ ÅîÍ츢ðΠ þÕ째ý. ÌÊ, ¾õÓ ±øÄ¡òÐìÌõ Ìð¨À ¦º¡ý§Éý.  ´Õ ¿¼Á¡Îõ Ãò¾ Åí¸¢Â¡ ±ôÀ×õ ¾Â¡Ã¡ þÕ째ý. þо¡ý ±ý ƒ¢õ À¡ÊìÌ ¸¡Ã½õ" 

¬îº÷Âò¾¢ø š¨¼òÐ §À¡§Éý.  þôÀÊ ´Õ ±ñ½Á¡?  þôÀÊÔõ ´Õ ÁÉ¢¾Ã¡?

"º¡¢ «ó¾ ¦Àñ ÌÆó¨¾ìÌ ±ýÉ ¬îÍ?"

"ôî! ¦ºòÐô §À¡îÍ"

Saturday, November 19, 2011

அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே....

தலைப்பை பார்த்ததும் நண்பர்களை பத்தி இருக்குமோ அப்படீன்னு நீங்க நினைச்சீங்கன்னா, நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞாணியாவோ, ஆல் இன் ஒன் அழகு ராஜா அறிஞராவோ தான் இருக்கோணும்.

அள்ள அள்ள குறையாது நண்பர்களோட கழிச்ச அந்த நாளின் நினைவுகள்.  இனி வரும் பதிவுகள்ள கொஞ்சம் சொரண்டி பாக்குறேன்.  எத்தனை நாள் தான் திரும்பி பாக்குறது.

நாங்க பசங்க ஒரு ஆறு பேர்.  அதோட எங்க வகுப்பிலேயே படிச்ச பொண்ணுங்க ஒரு நாலு பேர். எல்லாரும் ஆறாம் வகுப்புலே இருந்து ஒன்னா குப்பை அள்ளுனவுங்க (எத்தனை நாளைக்கு தான் கொட்டறது).  நாங்க எல்லாம் ஒரு மார்கமான குரூப்பு.  பொண்ணுங்க எல்லாம் ஏதோ பரிதாபப் பட்டு எங்களையும் மனுச பயலுவளா மதிச்சு குரூப்புல இருந்தாங்க.  ஆனா நாங்க ஆறு பசங்க இருந்தோமே, (இன்னும் இருக்கோம், ஒவ்வொருத்தன் உலகத்துல ஒவ்வொரு மூலையில).  ஏதோ இயற்கையே (நமக்கு கடவுள் எல்லாம் கிடையாதுங்க) எங்க ஆறு போரையும் பெவிகால் போட்டு ஒன்னா ஒட்டி, சிவாஜி பாசமலர் தங்கைய வாழ்த்தி அனுப்புன மாதிரி, ஏழேழு ஜன்மத்துக்கும் இணைபிரியாம இருங்கன்னு கண் கலங்குன கதையா ஒன்னு மன்னா தான் திரிவோம்.

இப்போ எங்க ஒவ்வொருத்தரை பத்திய பேக்கிரவுண்டு, front,  சைடு கிரவுண்டு எல்லாம் சொன்னா தான் உங்களுக்கு நாங்க வாழ்ந்த வாழ்க்கைய அப்படியே பாரதிராசா படம் பார்த்தாப் போல பார்க்க தோணும்.  கர்சீப்பை ரெடியா வச்சுக்குங்க. படிச்சதுக்கு அப்புறம் உங்களுக்கு நிச்சயம் கண் கலங்கும். அது காமெடியால இருக்கலாம் இல்லேன்னா கடுப்புலே கூட இருக்கலாம்.

எங்க ஆறு பேருல, ரெண்டு பேரு கமல் ரசிகர்கள், ஒருத்தர் ரஜினி, ஒருத்தர் பாக்கியராஜ் (ஹலோ நிஜமா தாங்க), ஒருத்தர் சிவாஜி.  இன்னும் ஒருத்தர் நியுட்ரல் பார்ட்டி.  ஆனா அந்த தகுதிய வச்சுக்கிட்டே எல்லாரையும் கலாய்ப்பாரு  அவுரு.

எங்களுக்குள்ள எழுதப்படாத விதி என்னன்னா (சேர்ந்ததே விதி தான், அதுல இது வேறயான்னு கேக்கப்படாது), ரஜினி படம் வந்தா ரஜினி ரசிகர் தான் எல்லாருக்கும் படம் பார்க்க ஸ்பான்சர் பண்ணுவாரு.  அது போல மத்தவங்க.  இந்த முறையில ஒரு தடவை ஐயா சிவாஜி நடிச்ச ஒரு படம் வெளி வந்தது. "யோவ் நீ சொல்றதை பார்த்தா நீ இப்போ பெருசு தானே?" அப்படீன்னு யாருங்க சீட்டு எழுதி அனுப்பி இருக்கறது?  கமல் சொன்ன மாதிரி அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.  படம் முதல் நாள் முதல் ஷோ.  நாப்பது, ஐம்பது வயசு பெருசுங்க (அப்பவே) ஒரு நாலு கூடை உதிரி பூவை எடுத்துக்கிட்டு சினிமா கொட்டாய்குள்ளே வந்து ஐயா சிவாஜி வந்தவுடனே ஸ்க்ரீன்ல பூவை போட்டு, விசில் அடிச்சு, டயர்ட் ஆயி (வயசாச்சு இல்லே) உக்காந்துட்டங்க.  படத்துல ஒரு சீன்ல அப்போதைய குழந்தை நடிகை ஒருத்தர், டிவில ஒரு சீனை பார்த்துட்டு "ஐ" அப்படீன்னு குதிப்பாங்க.  அப்போ பார்த்து நம்ம நியுட்ரல் பார்ட்டி, பேபி ஷாலினி மாடுலேஷன்லேயே ஒரு கமெண்ட்டை போட, முன்னாடி உக்கார்ந்து இருந்த ரசிக கண்மணிங்க எல்லாம் எழுந்து "ஏய், யார்ரா, யார்ரா அதுன்னு" எழுந்தாங்க பாருங்க.  எங்க ஆறு நாடியும் (ஏழு பேரு இருந்தா தானே சப்த நாடி), ஒடுங்கி போய், குனிஞ்சு உக்காந்துகிட்டோம்.  படம் முடிஞ்சு (விட்டாப் போறோம்னு) வெளிய நாங்க அழுதுக்கிட்டே வந்தோம்.  (ஹலோ மிஸ்டர் யாருக்கும் அடியெல்லாம் கிடையாது).  நம்ம சிவாஜி ரசிகர் வீடு வரைக்கும் கர்சீப்பை பிழிஞ்சிக்கிட்டே வந்தார்.  "சரி உடுறா, எப்பவாவது இந்த மாதிரி நமக்கு சோதனை வர தான் செய்யும், அதுக்காக அழப்படாது" அப்படீன்னு சொன்னா இன்னும் ஓவரா தேம்பி தேம்பி அழுதான்.  "ஏண்டான்னு?" கேட்டா, "டேய், எப்படிரா இப்படிப்பட்ட ஒரு படத்தை பார்த்து அப்படி சொல்லிட்டீங்க? அண்ணன் நடிப்பை பார்த்து எத்தனை பொம்பளைங்க அழுதாங்க தெரியுமா?  ச்சே உங்களோட இனிமே அண்ணன் படத்துக்கு வர மாட்டேண்டா.  இனிமே உங்க கிட்ட பேச மாட்டேண்டா" அப்படீன்னுட்டு விறு விறுன்னு போய்க்கிட்டே இருந்தான்.

நம்ம நியுட்ரல் பார்ட்டி, "விடுங்கடா, எப்பவும் ஒரு சோதனை வந்தா,  பின்னாடியே ஒரு நல்லது நடக்கும்னு"  சீரியஸா மூஞ்சிய வச்சுக்கிட்டு சொல்றான். 

   


Friday, November 18, 2011

ரொம்ப நாளைக்கு அப்புறம்


மன்னிக்கனும் மக்களே! ரொம்ப நாள் ஆச்சு.  காரணம் எதுவுமில்லை.  

கேபிள் அண்ணன் எல்லாம் பின்னூட்டம் போட்டது எனக்கு கிடைச்ச அங்கீகாரம். அவருக்கும், மற்றவர்களுக்கும் நன்றி.  

நேற்று ஒரு பெரியவர் ஒரு அருமையான வாழ்க்கை தெளிவுரை சொன்னார். சும்மா நச்சுன்னு இருந்தது. அவரு என்ன சொன்னாருன்னா...

"மக்கள் பிறந்த நாள் கொண்டாடுறது தப்பு இல்லை. ஆனா எல்லாரும், 80  வயசு கிழவன் பிறந்த நாள் கொண்டாடினாலும், இன்னும்  நீண்ட நாள் வாழ வாழ்த்துக்கள் அப்படீன்னு வாழ்த்தறது சம்பிரதாயமான அபத்தமா போச்சு.  பிறந்த நாள் என்பது நெடுஞ்சாலையில் நட்டு வச்சு இருக்குற மைல் கல் மாதிரி.  ஒரே வித்தியாசம், நெடுஞ்சாலை மைல் கல் இன்னும் போகப் போற தூரத்தை சொல்லும்.  பிறந்த நாள் என்னும் மைல் கல் வாழ்கை பயணத்தில் எவ்வளவு தூரம் கடந்து வந்து இருக்கீங்கன்னு சொல்லும்.  கொஞ்சம் சுய பரிசோதனை செய்து கொள்பவர்களாய் இருந்தால், 'இத்தனை வருஷம் கடந்திருக்கியே எதையாவது உருப்படியா செஞ்சு இருக்கியா?' அப்படீன்னு அந்த மைல் கல் உணர்தற மாதிரி நினைப்பாங்க. 

மக்கள் இந்த உலகத்துக்கு வந்த முதல்  நாள்லே இருந்து தனக்கு என்ன வேனும் அப்படீன்னு தான் நினைக்கிறாங்களே தவிர, இந்த உலகத்துக்கு தான் என்ன குடுக்க போறோம்னு நினைக்கிறதே இல்லை. ஒவ்வொரு மனிதனும் 'தனக்கு கிடைக்கனும்னு நினைக்கிறதை விட்டு விட்டு, மற்றவர்க்கு கொடுக்கணும்னு நினைச்சா', இந்த உலகமே ஒரு சொர்க்கபுரியா மாறிடும்.  ஏன் நான் குடுக்கணும்னு நினைச்சா, இப்ப நீங்க அனுபவிசிக்கிட்டு இருக்கிற இந்த வாழ்க்கை உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் உங்களுக்காக உருவாக்கி விட்டுச் சென்றது தான் அப்படீன்னு நினைக்கணும்.  தேவர் மகன் படத்துல ஐயா சிவாஜி சொன்னது ஞாபகம் வருதா.  விதை நீ போட்டது, பழத்தை உன் பேரன் சாப்பிடுவான்."

ரொம்ப சொறிஞ்சிட்டேனோ?  நல்லா இருந்தா முதுகுல தட்டுங்க. இல்லேன்னா மண்டையில தட்டுங்க.

சீக்கிரம் சந்திப்போம்.