Friday, November 27, 2009

நாம் இந்தியர்

இனத்தால்
மதத்தால்
மொழியால்
நாம்
வேறு வேறு என்றாலும்
உணர்வால் நாம் இந்தியர்.....
காவிரியும், முல்லை பெரியாரும்
பிரச்சினை ஆகாத வரை...

Tuesday, November 24, 2009

Positive Attitude 2

Positive Attitude ஐ பற்றி பல இடத்துல நான் படிச்சிருக்கேன். நானே கூட அதை பற்றி Training Programs செஞ்சு இருக்கேன். ஆனா அள்ள அள்ள குறையாதது அதை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். உதாரணத்துக்கு நம்ம Builder எங்க வீட்டு ஜன்னலை வச்ச கதைய சொல்லணும். நான் அவருக்கு ஒரு மாடல் ஐ காட்டினேன். ரொம்ப சாதரணமா குறுக்க நெடுக்க நேர் கம்பி வச்ச மாடல் அது. பார்க்க simple ஆ இருந்தாலும் இப்பல்லாம் பெரும்பாலான வீடுகள்ல அதை தான் வைக்கிறாங்க. பார்க்க decent ஆ நல்லா இருக்கும். ஆனா நம்ம ஆளு ஒரு மாடல் கொண்டு வந்தாரு. ஏதோ எங்க வீட்டுல தான் 26/11 மும்பை தீவரவாதி கசாபை பாதுகாத்து வச்சு இருக்காப்போல ரொம்ப நெருக்கமா கம்பி வச்சு ஒரு மாடல். 'என்னாங்க இது?' அப்படீன்னு கேட்டா அதுக்கு சொன்னாரு பாருங்க justification. அடடா பெரிய பெரிய Trainer, Negotiators எல்லாம் அவர் கிட்ட ஒரு Session எடுத்துக்கணும். அண்ணன் என்ன பண்ணிட்டாருன்னா நம்ம சொன்னதை ஒழுங்கா கார்பெண்டர் கிட்ட சொல்லலை. (இல்ல கார்பெண்டேரும் நம்ம ஆள மாதிரியே Hi-fi ஆளான்னு தெரியலே). பாருங்க இங்கேயும் Communication Skill னுடைய முக்கியதுவத்தை. சரி நம்ம பில்டர் சொன்ன justification க்கு வருவோம்.
1. நெருக்கமா இருந்தா material நிறைய இருக்கும் சார். அது உங்களுக்கு தானே லாபம்(???????)
2. Safety சார் Safety. இந்த காலத்துல எவ்வளவு safety யா போட்டாலும் தூக்கிடறாங்க சார்.
3. Design எல்லாம் நம்ம எப்படி பாக்குறோம் என்பதில இருக்கு சார். நாம நல்லா இருக்குன்னு பார்த்தா அது நல்லா இருக்கும். நல்லா இல்லேன்னு பார்த்தா நல்லா இருக்காது சார்.

மூணாவது point ல நிஜமாவே நம்ம ஆளு என் நெஞ்சை நக்கிட்டாரு. அதுக்கு அப்புறமும் நான் Positive Attitude அப்படீன்னா என்னன்னு தெரிஞ்சிக்காம இருந்தேன்னா, நானெல்லாம் ஒரு மனுஷனா?

இப்படி எங்களுக்கு தினமும் ஒரு Management Lesson நடத்திக்கிட்டு இருக்காரு நம்ம ஆளு. நிறைய இருக்கு. நேரம் வரும் போது சொல்றேன்.

அடுத்ததுல ஏதாவது ஒரு பொது விஷயத்தை பத்தி கதைப்போம்.

Monday, November 23, 2009

பாசிடிவ் attitude

நண்பர்களே

நல்வாழ்த்துக்கள்!

Positive attitude என்ற விஷயத்தை நான் இப்போ எல்லாம் அனுபவ பூர்வமா சந்திச்சிகிட்டு இருக்கேன். அதாவது நாங்க இப்போ இருக்கற வீட்ட கொஞ்சம் பெரிசு படுத்தறோம் ('படுத்தரோம்னு' தான் வாய் இருந்தா வீடு கதறும்). நமக்கு வாய்ந்த builder நமக்கு மேல 'Positive Attitude' உள்ளவரு. ரொம்ப நல்லவரு. அவர் வாயில இருந்து இல்ல, முடியாது அப்பிடீன்ற வார்த்தை எல்லாம் வரவே வராது. 'சார், Infosys Building மாதிரியே நம்ம வீட்ட கட்டணும்னு சொல்லி பாருங்க. முடிச்சிடலாம் சார், அதுகென்ன அப்பிடீன்னு சிரிக்காம சொல்லுவாரு. சுவரு ரெண்டு அடி எழுந்ததும், கல்யாணப் பரிசு E.V சரோஜா அம்மா, தங்கவேலு அய்யா கிட்ட பூரி செய்றதை பத்தி சொல்லும் போது ஒவ்வொரு stage லேயும் 'அது மட்டும் தாங்க தெரியாது' அப்படீன்னு சொலுவாங்க பாருங்க, அதே தான் நம்ம ஆளு கிட்டேயும். ஆனா நம்ம ஆளு சூப்பர். 'சார் அந்த டிசைன் Infosys க்கு ஓகே சார். ஆனா நம்ம இடத்துல இந்த டிசைன் தான் சார் கரெக்ட்' அப்படீன்னு நம்மள கரெக்ட் பண்ணுவாரு. சரி தொலையுதுன்னு விட்டுட்டு 'சார், sun shade இந்த model பண்றேன்னு சொன்னீங்களே' அப்படீன்னு கேட்டா, கைப்புள்ள வடிவேலு கணக்கா 'அது போன மாசம், இது இந்த மாசம்' அப்படீன்னு சொல்ற அளவுக்கு நம்மள ஆத்மபரிசோதனை செய்ய வச்சிடுவாரு.

ஆனா ஒண்ணுங்க. Quality நிஜம்மாவே fantastic. அதுல ஒரு குறையும் இல்ல. நம்மள மாதிர் ஒரு அகராதி சொல்றதை புரிஞ்சிகிட்டு அவர் வேலை செய்யறுதுக்கே அவருக்கு ஒரு 'Adjustable திலகம்' அப்படீன்னு ஒரு பட்டம் குடுக்கணும்.

'டேய் வென்ன, Positive Attitude அப்படீன்னு ஏதோ சொல்றேன்னியே. அத சொல்லு மொதல்ல' ன்னு நீங்க நினைக்கிறது புரியுது.

கைப்புள்ள style சொல்லனும்னா 'இது இன்னைக்கு. மிச்சம் நாளைக்கு. வர்ட்டா.'